(ஏ)மாற்றங்களே
- - - - - - - - - - - - - - -
மாற்றம் வேண்டும் என்றோம் /
வாக்கிற்கு பணத்தை பெற்றோம் /
ஜனநாயகத்தை (ஏ)மாற்றிடவே /
ஜனநாயக கடமை ஆற்றினோம் /
ஆட்சி வந்து பல நாளாச்சு /கொடுத்த கோரிக்கைகள் நிறைவேறலையே /
ஆட்சியாளரிடம் சென்று கேட்டால் /
வாக்கை எனக்கு போடலையே/
என் பணத்திற்கு போட்ட வாக்கு அது /
ஏன் நான் செய்ய வேண்டும் என்றான் /
வாக்கிற்கு கொடுத்ததோ ஐநூறு/
அவனோ கோடி கோடியாய் சம்பாதித்தான்/
வீடுகள் பல கட்டிவிட்டான் /
சின்ன வீடு பெரிய வீடு /
வசதியெல்லாம் தானாய் வந்தது, /
வாக்களித்த மக்கள் இங்கே /
பட்டினியாய் கிடந்து சாகுது அங்கே /
குப்பை மேட்டில் படுத்து உறங்குதே /
சொகுசு வாழ்வு கனவில் வர/
வந்தென்ன பயன் இனி என்ன /
நாம் செய்த தவறு அது /
ஏமாற்றமே மிஞ்சியது,
ஆட்சி மாற்றம் வந்திடும் /
அப்பொழுதே (ஏ)மாற்றம் வந்திடும் /
விழிப்புணர்வாய் இருந்திடுவோம் /
----------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment