கிராமத்து பூங்குயிலே
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
கிராம கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆ:கிராமத்து பூங்குயிலே
பூஞ்சோலையில என்ன வேலை
பூக்களெல்லாம் நானிட
அலுங்கி குலுங்கி வருவதேனடி
பெ: அட கருத்த மச்சான பாக்கத்தானே
குடம் எடுத்து வந்தேன் நானே
நிறைகுடத்த ஊத்திப்புட்டேன்
தண்ணி எடுக்கும் சாக்கு வச்சி
உன்ன பாக்க வந்தேன் நானே
ஆ: ஆச உன் மேல இல்லடி புள்ள
பாசம் வைக்க எனக்கு தெரியாதடி
முரட்டுக் காளை நானடி புள்ளே
என்னை அடக்க முடியாதடி
முரண்டுப் பிடிச்சா சேதாரம் ஆகி போகுமடி
பெ: களத்தில் இறங்கி பார்த்திடலாம்
என் கூந்தலுக்கு நீயும் அடிமையய்யா
புடவை விலகி பார்த்துப் புட்டா
தானா அடங்கி போவியே மாமா
காளையை அடக்க நானிருக்கேன்
என்னை அடக்கிட முடியுமா மாமா
ஆ: அடி உசுப்பேத்தி பார்க்காதடி
மாமன் விளையாட்ட பார்த்ததில்லே
ஒரு முறை என்னுடன் விளையாடடி
மாமனுக்கு நீயும் அடிமையடி
பெ: அட அதையுமே பார்த்திடலாம்
மாரியாத்தா கோவிலுக்கு வந்திடய்யா
பரிசம் போட காத்திருக்கேன்
தாலிக் கட்டிட்டு நீயும் விளையாடய்யா
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment