Monday, 9 October 2017

வேண்டாமென்கிறாய் வேண்டுமென்றே

வேண்டாமென்கிறாய் வேண்டுமென்றே
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
ஆசை முத்தம் கொடுக்க வந்தேன்
வேண்டாமென்றாய்
திரும்பிச் செல்கையில்
ஏக்கமுடன் பார்த்தாய்.

அன்பை பொழிய ஆசைப்பட்டேன்
கோபம் மட்டும் வேண்டாம் என்றாய்
பாசத்திற்காக ஏங்கிய நான்
உன் அன்பை ஆள ஆசை கொண்டேன்

தங்க நிறத்தழகியே நீ
பொன் நகையை அணிந்தாலே
தங்கம் கூட நாணம் கொள்ளும்
அதனாலே வேண்டாமென்கிறாய்,
இருந்தும் ஆசையோடு நீ பார்க்க
சவரன் கணக்கில் வாங்கி வந்தேன்
அணிந்திட மறுப்பது ஏனடியோ

உறவையெல்லாம் வேண்டாமென்றே
மறந்தும் போனாய் நீயடி
உன்னை நம்பிய புது உறவும் நானடி
வேண்டாம் என்று மறுத்து விடாதே!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்





No comments:

Post a Comment