Monday, 9 October 2017

மன ஊஞ்சல்

மன ஊஞ்சல்
- - - - - - - - - - - - - -
ஆலமரத்தில் ஆடிடும் ஊஞ்சலோ
பெண்ணுக்கு மகிழ்ச்சி தரும்
எதிர்மறை எண்ணங்கள் தானாய் மறையும்
உடலுக்கோ உற்சாகம் தரும்
மனதுக்கோ புத்துணர்வு தரும்
குழந்தைகள் ஆடிடும் ஊஞ்சலது
இனிமை தரும் தருணமது

நேராய் அமர்ந்தே
இரு பக்கமும் கைகளால் பிடித்தே
ஆடிட வேண்டும்
முதுகுத் தண்டில் பாய்ந்திடும் ரத்தம்
எதிர்கால எண்ணங்கள்
தானாய் வளர்ந்திடும்
திருமண சடங்கில் ஓர் அங்கம்
ஊஞ்சல் ஆடிடும் தம்பதியர்க்கு
மகிழ்ச்சியை தந்திடுமே
சிறுவர் முதல் பெரியோர் வரை
ஆடி மகிழ்ந்திட நினைத்திடுவர்

கோபத்தில் ஊஞ்சல் ஆட
கோபங்கள் தானாய் மறைய
தோட்டத்தில் ஊஞ்சல் ஆட
பிராண வாயு கிடைத்திடும்
கணினி கையில் கிடைத்திட
ஊஞ்சல் மறைந்து போக
மன ஊஞ்சல் கட்டி
மனிதர் குலம் ஆட நினைக்குதே!
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்




No comments:

Post a Comment