சந்தித்த வேளை
- - - - - - - - - - - - - - - -
கண்கள் பார்த்தது
இதயம் பணிந்தது
விட்டில் பூச்சிகள் பறந்தது
நிலவொளி வீசியது,
பூக்கள் கொட்டியது
அழகிய காதல் பிறந்தது
சந்திக்க நேரமில்லை
சூழ்நிலையும் கிடைக்கவில்லை
கண்கள் மட்டுமே பேசிக் கொள்ள
மனம் இரண்டும் ஒத்துப் போக
தவறுகள் செய்யவில்லை
காதல் தானே செய்கின்றோம்
அதற்கும் ஏன் இந்த படபடப்பு
தெரியவில்லை
அன்பு கலந்த பயமோ,
கனவோடு வாழ்கின்றோம்
கனவிலே பேசினோம்
முத்தமிட்டோம்,
வாழ்க்கையை நடத்தி விட்டோம்
மழலைகளை கொஞ்சுகின்றோம்
விழித்துப் பார்க்க
கனவு கலைய
ஏமாற்றத்தில் இதயம்
சுக்கு நூறாகிப் போனதே
சந்தித்த வேளை
மனம் படபடக்க
நெஞ்சம் துடிதுடிக்க
பார்வையால் பேசியே
மௌனமாய் கலைந்தோம்
உண்மைக் காதலராய்
கனவில் வாழ்கிறோம்
---------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment