பரிசம் போடக் காத்திருக்கேன்
-------------------------------------------------
பரிசம் போடக் காத்திருக்கேன்
என் கண்ணே கண்மணியே
உன்னை தோள் மேல தூக்கி வச்சி
கொஞ்சப் போறேன்
கண்ணே கருங்குயிலே
கானா ஒன்னு பாடி வந்தேன்
கிராமிய கவி நான் வடிச்சேன்
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சவளே
அருவி போல கொட்டுதடி
என் பாட்டுல உன் மணம் வீசுதடி
தென்றலாய் நான் பாடயில
மின்னலாய் நீ மறைவதேன்
தாவணி போட்ட அக்கா மகளே
வேட்டியும் இங்கே விலகுதடி
அனுமதி நீ தந்துப்புட்டா
வெத்தலப்பாக்க மாத்திடலாம்
பரிசம் போட காத்திருக்கேன்
ஓடி வாடி நீயும் புள்ள
பிடிவாதம் வேணாமடி
- - - - - - - - - - - - - - - - - - - - .
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment