Monday, 9 October 2017

பழைய சோறும் பச்சை மிளகாயும்

பழைய சோறும் பச்சை மிளகாயும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பழைய சோறும் பச்சை மிளகாயும்
வாசம் வீசும்
ஏழைகள் விரும்பிடும் உணவு
சத்துக்கள் எல்லாம் கிடைத்திடுமே

காலையில் பழைய சோற்றின் நீரை பிழிந்து
சோற்றை அள்ளி தின்னலாம்
இடையில் பச்சை மிளகாய கடிக்கலாம்
ருசியாய் ருசித்திடுமே

ஏழைக்கேத்த எள்ளுருண்டை
பழைய சோறும் பச்சை மிளகாயும்
ஒரு நாள் முழுவதும் உணவை
அருந்தாமல் இருந்திடலாம்

பாட்டன் பாட்டி சாப்பிடுவாங்க
இடையில் போனா ஊட்டிடுவாங்க
ருசியாலே உள்ளே போகும்
அதனுடன் பச்சை மிளகாய்
அமிர்தமா இனித்திடுமே
பழமையை மறந்திட வேண்டாம்
பழைய சோற்றை துறந்திட வேண்டாம்
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment