Monday, 9 October 2017

கத்தியும் புத்தியும்

கத்தியும் புத்தியும்
- - - - - - - - - - - - - - - - - -
கத்தியை தீட்ட நினைக்காதே
புத்தியை நீயும் தீட்டிடு
அடாவடியால் அடக்க முடியாது
அன்பால் எதையும் சாதிக்க முடியும்

புத்திக்கு கத்தி ஈடாகுமோ
கத்தியால் புத்தியை அழிக்க முடியாது
புத்தியால் கத்தியும் மழுங்கி போகுமே
கத்தியை எடுத்தவன் வீணன்
புத்தியை தீட்டியன் வீரன்

கத்தியால் ரத்த வெள்ளத்தை காணலாம்
புத்தியால் அன்பை அலைபாய விடலாம்
கத்திக்கு நிரந்தர வாழ்க்கை ஏது
புத்திக்கு ஆயுள் நூறு

வலியவனுக்கு கத்தி ஆயுதம்
எளியவனுக்கு புத்தியே ஆயுதம்
உடல் பலம் இருந்து  பயன் ஏது
புத்திக்கூர்மை இருக்க உலகையே ஆளலாம்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்
கத்தியை எடுத்தவன் கத்தியால் சாகுவான்
புத்தியை தீட்டியன் வாழ்வில் உயர்வான்
கத்தியை தீட்டியவன் தரணியில் தாழ்வான்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment