மலர்களே மலருங்கள்
----------------------------------
பூவோ அவளை போல
அவளோ பூவை போல
காட்சியும் கானமும் ஒன்றே
மனமும் மணமும் இரண்டே
அவள் நடக்கையில் கொலுசொலி கேட்டிடும்
பூவோ மலரையில் மணம் வீசிடும்
பூத்த மலர் அழகு கொஞ்சும்
பருவ பெண்ணின் அழகோ மிளிரும்
இதழ்கள் விரித்திடும் மலர்கள்
உதடுகளால் புன்னகை பூத்திடும் பெண்கள்
மலரை நாடும் வண்டுகள் கூட்டம்
மாதுவை நாடிடும் ஆடவர் கூட்டம்
நிறைவாய் வாழ்ந்திடுங்கள்
மலர்களே மலருங்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment