Monday, 9 October 2017

பாடாத ராகங்கள்

பாடாத ராகங்கள்
------------------------------
பாடாத ராகங்கள்
நான் பாடி வந்தேனே
தேடாத உன் கண்களை
நான் தேடி வந்தேனே
பட்ட மரமாய் நான்
பசுந்தளிராய் நீ
புத்துயிரூட்ட வருவாயோ!

யாழ்மீட்ட வருவாயோ
வீணையாக காத்திருந்தேன்
புல்லாங்குழல் வாசித்திட வருவாய் நீ
உன் மூச்சாய் நான் இயங்க
மேளங்களாய் முழங்கிட நானிருக்க
அழகொலியாய் நீ பிறக்க
ஒளி வீசிடும் காலங்கள் பிறந்ததுவே,

கேட்காத தெம்மாங்கு
நான் கேட்க வந்தேனே
அமிழ்தினும் இனிய
உன் சொல் கேட்டேனே
ராகமாய் இனிக்குதே
கவிதை மழை ஊற்றுதே
இன்ப ஊற்று பொங்குதே.

கண்கள் இரண்டும் பேசுதே
மனம் இரண்டும் இணைந்ததே
காதல் கவிதை பிறந்ததே
தேனாக இனிக்குதே
முத்த மழை பொழியவே
உடல்கள் இரண்டும் இணையுதே
ஊடலுடன் கூடலாய்
காமத்தில் காதல் முடிந்ததே!
- - - - - - - - - - - - - - - - - - - - - =
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment