Monday, 9 October 2017

ஏற்றுக்கொள்

ஏற்றுக்கொள்
போற்றிக் கொண்டாடுகிறேன்
____________________________
வீதி வரை உறவு
கடைசி வரை யாரோ
வீதி வரை வரும் உறவே
உன்னைக் கண்டேன்
நித்தம் ரசித்தேன்
கவிதையெல்லாம் வடித்தேன்
பாடலாய் பாடினேன்
மானாய் துள்ளினேன்
சிங்கமாய் கர்ஜித்தேன்
மாற்றம் பல வந்தது
தோற்றம் திடிரென மாறியது
ஒரு நாள் கண்ட முத்தே
தினந்தோறும் பார்க்க  வேண்டும்
பவளமாய்
என்னை ஏற்றுக் கொள்ளடி
கண்ணை இமை காக்கும்
உன்னை நான் காப்பேன்
கண் அசைவில் தெரியும்
வேண்டியது வந்திடும்
வேலியாய் நான் இருப்பேன்
நீ விரும்பிடும் ஆடவனாய் மாறிடுவேன்
குழந்தையாய் உன்னை கொஞ்சிடுவேன்
தகப்பனாய் உணவும் ஊட்டிடுவேன்
தோழனாய் என்றும் உடனிருப்பேன்
நடந்தால் நான் பாதையாவேன்
சுவாசித்தால் நான் தென்றலாவேன்
பாதை தனில் முட்கள் இருந்தால்
பாதத்தை உள்ளங்கையில் தாங்கிடுவேன்
கண்ணீர் வராமல் மீட்டிடுவேன்
என் பாதியில் நீ பாதியாய்
இணைந்தே பயணிப்போம்
வாழ்க்கை எனும் ஓடத்தில்
என்னை ஏற்றுக் கொள்ளடி
போற்றிக் கொண்டாடுகிறேன்
---------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment