Monday, 9 October 2017

சந்தோஷப் பூங்காற்றே

சந்தோஷப் பூங்காற்றே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அழகான குடும்பம் சந்தோஷமான வாழ்வு
அளவான நிம்மதி,
அறியாத துக்கங்கள் துன்பங்கள் பல
அணையாத குடும்பத்து விளக்காய் ஒளிர்கிறோம்

ஆறிடாத காயங்கள் இல்லை
ஆறுமுகனின் ஆசியிருக்க
ஆசைக்கு ஒன்று
ஆசிக்கு ஒன்று
இரண்டு பெற்றிட்டோம்
இருண்டிடாத வாழ்க்கையிலே
இனிமையாய் வாழ்கின்றோம்

ஈனச் செயல்கள் செய்ததில்லை
ஈரோட்டிலே வசிக்கின்றோம்
உவகைக் கொள்ள மாட்டோம்
ஊர் பெயரை காத்திடுவோம்
ஊருக்கு எல்லாம் தானங்கள் செய்திடுவோம்

எருக்கஞ் செடியாய் பூத்திருக்கோம்
எருமையை எல்லாம் மேய்த்திட்டோம்
எளிமையாய் நாங்கள் வாழ்கின்றோம்
ஏழைகளாக பிறந்ததாலே
ஏழ்மையில் உழன்றிட மாட்டோம்
ஏணியைப் போல அமைந்திட்டோம்
ஏற்றமாகவே வாழ்கின்றோம்

ஐம்பதை நாங்கள் கடந்திட்டோம்
ஒன்றாய் நாங்கள் இருக்கின்றோம்
ஒவ்வாமை எங்களுக்கு வந்ததில்லை
ஓயாமல் உழைக்கின்றோம்
ஓடிக் கொண்டே இருக்கின்றோம்
ஒளவையை போல் வாழ்ந்திடுவோம்
நந்தவனம் என்ற வீட்டிலே
சந்தோஷ பூங்காற்றாய் மிளிர்கின்றோம்
------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment