அழகிய சினம்
__________________
அழகிய சினம்
குழந்தையிடம் தாய் காட்டிடுவாள்
தந்தை தாயிடம் காட்டிடுவார்
சிறிது நேரமே நீடிக்கும்
மீண்டும் இன்முகம் மலரும்
புன்னகை ததும்பும்
அடி வாங்கும் குழந்தை
அழுதிடும் தேம்பலாய் தேம்பிடும்
மீண்டும் ஓடி வந்திடும்
சினம் நினைவில் கொள்ளாது
அன்பு இருக்கும் இடமெல்லாம்
சினம் அழகிய உருவிலே வரும்
விரைவில் மறையும்
சினம் வந்து மறைந்தால்
நட்பு நீடிக்கும்
உள்ளங்கள் ஒன்றுக்கொன்று
புரிந்துக் கொள்ளும்
காதலர்களிடையே
லேசாய் துளிர் விடும்
காதல் பலப்படும்
-----------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment