Monday, 9 October 2017

கிராமத்து வாழ்க்கை

கிராமத்து வாழ்க்கை
- - - - - - - - - - - - - - - - - -
வாருங்களேன் வாருங்களேன்
கிராமத்துக்கு போகலாம் வாருங்களேன்
புகை மண்டலம் இல்லே
வாகன சத்தங்கள் இல்லே
அமைதியான வீதியிலே
தாவணி பொன்னுங்க நடந்து வரும்
பார்க்க பார்க்க ஆனந்தம்

குசலம் விசாரிக்கும் பாட்டிகள்
பொக்கைப் பல்லை பார்க்கலாம்
வெத்தல வாடை மணக்கும்
அவா வாயை திறக்கையிலே

அன்பாய் திட்டும் பாட்டன்களின்
அறிவுரைக் கூறும் அழகோ அழகு
கதை கதையாய் கேட்கலாம்,
கிராமத்து வாடைய பார்க்கலாம்
கேட்க கேட்க சலிக்காது
கேட்காம இருக்க முடியாது

தனிக்குடும்பம் அங்கே இல்லைங்கோ
கூட்டுக் குடும்ப வாழ்க்கை நடக்குதுங்கோ
சித்தப்பன், பெரியப்பன் தனி தனி
இல்லைங்கோ
ஒரே அடுப்பில் சோறெல்லாம் வேகுமுங்கோ
அன்பாய் உட்கார்ந்து சாப்பிடுவாங்கோ
குழந்தையாய் கொஞ்சி ஊட்டுவாங்கோ

ஓடி ஆடி விளையாடலாம்
இடமும் விசாலமாய் இருக்கையிலே
ஓங்கி உயர்ந்த பனை மரத்தில் ஏறி
பனங்காய் பறித்தே உண்டிடலாம்
திருடி கொய்யா தின்றிடலாம்
தூண்டில் போட்டு மீனெல்லாம் பிடிக்கலாம்
நெருப்பில் சுட்டு ருசியாய் தின்னலாம்

ஓடி ஆடி குதிக்கலாம்
ஆல மர விழுதில் ஏறி
குளத்தில் குதித்தே நீந்திடலாம்
தோழர் கூட்டம் அலைமோத
கோட்டிப்புல் அடித்திடலாம்

வயக்காட்டில் வேலை செய்வோம்
நடைபயிற்சி தேவையில்லே
இரண்டு நெல் மூட்டைய தூக்கி நடந்தா
உடற்பயிற்சி தேவையில்லே

காதல் செய்யும் கிராமத்து கிளிகளை
சவுக்குத் தோப்பில் பார்க்கலாம்
குயில்கள் கானாப் பாடும்
மயில்கள் ஒய்யாரமாய் ஆடிடும்
நாட்டுக் கோழி தாவி ஓடும்
நாய்குட்டிகள் அன்பாய் பழகும்
சூரியன் உறங்கி எழும்
சூரியன் உறங்க நிலா விம்மி எழும்
காட்சியெல்லாம் ரம்மியமாய்
நகரில் காண கிடைக்காது.

நாகரிகமற்ற வாழ்க்கையாலும்
அநாகரிகமான பேச்சாலும்
கிராமத்தில் வாழ பிடிக்காதாம்
நகரத்து வாசி சொல்ல கேட்டோமுங்கோ
கிராமத்துப் பக்கம் வந்து பாருங்க
இயற்கை வாசம் வீசும் போங்க

வாகன ஒலி கேட்காது
வண்டி மாடு சத்தம் ஒலிக்காது
மாட்டை அதட்டிடும் சத்தம் கேட்கும்
மாட்டு வண்டியில போகலாம்
நவீன வாகன சுகமெல்லாம்
கட்ட வண்டிக்கு ஈடாகுமா
நகர மயம் வேணாமுங்கோ
கிராமத்த மாத்த பார்க்காதீங்க
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்






No comments:

Post a Comment