உனக்குள் தொலைத்தேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
உனக்குள் தொலைத்தேன்
உயிராய் இருந்தேன்
நிலையாய் நானும் வாழ்ந்தேன்
புயல் போல வந்தாய்
நெஞ்சில் நங்கூரமாய் அமர்ந்தாய்
மனதை களவாடி சென்றாய்
உயிரை உன்னுடன் இணைத்தாய்
நிலையில்லாமல் பதறுகிறேன்
புழுதியில் மூழ்கினேன்
மழையாய் வந்து புழுதியை அடக்கினாய்
கடலில் கவிழ்ந்தேன்
அலையாய் வந்து கரை சேர்த்தாய்
ஆற்றில் குதித்தேன்
சுழலாய் வந்து சுழற்றி வீசினாய்
கானகத்தில் நான் குதித்தேன்
மழையாய் வந்து மீட்டாய்
மின்னலாய் வந்தாய்
இதயத்தை கிழித்தாய்
என்னிடம் இல்லை என் உயிர்
உனக்குள் தொலைத்தேன் என் மனதை
தினம் தினம் நினைக்கின்றேன்
கனவிலே உன்னோடு வாழ்கின்றேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Monday, 9 October 2017
உனக்குள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment