கனவில் ஒரு காதலி
- - - - - - - - - - - - - - - - - -
கனவில் ஒரு காதலி
இம்சை செய்வதைக் கண்டேன்
தினம் தினம் ஒரு
அழகிய ராட்சசியை பார்க்கின்றேன்
கோவைப் பழ உதடுகளோ
கவ்வி இழுக்கும் அருகிலே
வந்து வந்து ஏமாற்றிச் சென்றதே
நித்திரை கலைந்து நான்
விழித்தே பார்க்கிறேன்
யாருமற்ற முற்றத்திலே
மீனை போன்ற விழிகளோ
விழுங்க விழுங்க பார்த்தது
பார்த்த நேரம் மயங்கினேன்
எழுந்த நேரம் கனவோ கலைந்தது
தங்க நிறத்தில் வருகிறாள்
ரோசாப்பூ தருகிறேன்
அழகிய முத்தம் தருகிறாள்
அன்பை முழுவதும் தருகிறேன்
உடலை தழுவி நாணமடைந்தாளவள்
தலையனையை கட்டிப்பிடித்து
விழித்துப் பார்த்தேன்
அவள் அருகிலே இல்லை
கண்டது கனவென்று
நறுக்கென்று மனம் சொல்லியது
தேவதையுடன்
காதல் செய்கிறேன்
தினம் தினம் கனவில்
__________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment