Monday, 9 October 2017

தொலைந்து போகிற மனிதம்

தொலைந்து போகிற மனிதம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நல்லவனாய் நடிக்கிறாய்
வல்லவனாய் இருந்தும்
தீயவைகள் செய்கிறாய்
நல்லவன் என்ற போர்வையிலே
சமுக சேவகனாய் பகலிலே
முகமூடி கொள்ளையனாய் இரவிலே
ஏன் இந்த வேடம்
உன் குடும்பம் தழைக்கவா
பல குடும்பம் அழிவதை காணவில்லையா

காமம் மனதிலே எழுந்ததா
அன்றே கர்மம் விதைக்கப்பட்டது
சின்னஞ் சிறு குழந்தையும்
உன் காமத்திற்கு பலியா
மூளையில்லாத மானிடா
உன் மனசாட்சி தூங்கியதா
உன் மனிதமும் தொலைந்ததா

வாளை நீயும் ஏந்தினாய்
எழுதுகோலின் வலிமையை அறியாமல்
ஒரு நாள் உன் தலையெழுத்தை
தீர்மானிக்கும் ஆயுதமாய்
அன்று உன் ஆயுதம்
காணாமல் , ஏந்தியதை நினைத்தே
கலங்கிடுவாய் கவலையுடன்
உன் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும்
உன்னால் உன் உற்றார்
அசிங்கப்பட்டே
தற்கொலையும் நடக்கும்,
மனிதத்தை மட்டும் தொலைத்திடாதே
வருத்தப்பட்டு நோகாதே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment