நாடு மாறி போச்சுங்க
- - - - - - - - - - - - - - - - - - - - -
நாடு மாறி போச்சுங்க
பசுமை எங்கே போச்சுங்க
நிலமெல்லாம் வறண்டதே
தண்ணீர் இன்றி காயுதே
மழையும் பொய்த்து போச்சுங்க
காட்டை கழனியாக்கியதாலே
ஆத்துல தண்ணியும் வரலையே
ஏரிக்குளத்துலயும் தண்ணிர் இல்லையே
அட சேற்றைக் கூட காணோமே
வெடிச்சுப் போயி கெடக்குங்க
ஆடி மாதம் காத்தடிக்கும்
மார்கழியில மழை பெய்யும்
காலம் எல்லாம் மாறிப்போச்சு
சித்திர மாதத்துல மழை பெய்யுதுங்க
நிலமெல்லாம் வீடாச்சி
காடெல்லாம் கார்பரேட் கம்பெனி ஆச்சு
மலையெல்லாம் ரோடாச்சி
அருவிய எங்கே காணுமுங்க
ஆத்துல தண்ணி வருகுது
குடிக்க கேட்ட தர மறுக்கிறான்
பெப்சி கம்பெனிக்காரன் கேட்டா
கொடுக்கிறான்
தட்டிக் கேட்டா
போலீஸ் கேஸ் போடுறான்
இது என்ன நியாயமுங்க
அந்தக் கால மனிதர்கள்
நூறு வருஷம் வாழ்ந்தாங்க
இந்தக் கால மனிதர்களோ
அறுபதை எட்ட முடியலிங்க
உணவுப் பழக்கம் மாறிப் போக
நோயெல்லாம் தானாய் வந்தது
சுகரு நோயோ ஆளைக் கொல்லுது
கேன்சரோ தெரியாமக் கொல்லுது
நாடு தானாய் மாறலைங்கோ
நாம போட்ட விதை
இப்போ விளைஞ்சு நிக்குது
நல்லா இருந்த நிலத்துல
விஷ மருந்த ஊத்துனோம்
நாட்டு மாடவித்துப் புட்டு
ஜெர்சி மாட வாங்குறோம்
பனங்கள்ளு, தென்னங்கள்ளு
கள்ளுக்கடையை ஒழிச்சோம்
மிடாஸ் சரக்கு வாங்கி அடிக்கிறோம்
கமர் கட்டு, மல்லாட்ட கேக்கு
குச்சிமிட்டாய் குருவிரொட்டிய
மறந்தோம்
அட குர்கிறே வாங்கி
குர் குர்னு தின்னுறோம்
செய்ய வேண்டியதை செய்யல
செய்யக் கூடாததை செய்யுறீங்க
இப்ப நாடு மாறிப் போச்சுங்க
அட நாடெல்லாம் மாறலீங்கோ
நாமத்தான் மாறிப்புட்டோமுங்க
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment