வலிக்கவைத்து வழிகாட்டுகிறாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நினைவில் வந்தாய்
கனவாய் வந்தாய்
நெஞ்சத்தில் உறைந்தாய்
பனியாய் உருகினாய்
கவிதையாய் வந்தாய்
தேனாய் இனித்தாய்
மலராய் வந்தாய்
மணமாய் மணக்கிறாய்
தோழியாய் வந்தாய்
தோள் சாய தோள் தந்தாய்
தாயாய் வந்தாய்
குழந்தையாய் கொஞ்சினாய்
குயிலாய் வந்தாய்
ராகம் பாடி சென்றாய்
மயிலாய் வந்தாய்
அழகு நடனம் ஆடினாய்
உறங்க செய்தாய்
பிரிந்து சென்றாய்
மனதை வலிக்கவைத்தே
மரணத்தின் வழியை வழிகாட்டுகிறாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment