இயற்கையின் குழந்தைகள்
- - - - - - - - - - - - - - - - - -
வாழ்க்கையின் நிறம் சிவப்பு
உழைப்பின் பெயரும் சிவப்பு
உழைப்பாளிகளின் சின்னமும் சிவப்பு
தேய்ந்த கைகளின் நிறமும் சிவப்பு
கொடுத்து கொடுத்து சிவந்தது
கொடுங்கோல் இயற்கையின் பிறப்பும் சிவப்பு
அதன் குழந்தையின் பெயரோ நெருப்பு
சுடர் விட்டு எறியுது நெருப்பின் குழம்பு
அனலாய் வீசுது சூரியனின் பிழம்பு
தண்ணீரும் குறையுது,
நிலமோ வறண்டது,
அனல் காற்றும் வீசுது,
ஐந்து பெற்றாள் அன்னை
ஒன்றுக் கூட ஓரினம் இல்லை
நீரோ பொங்கினால் சுனாமியாம்
நிலம் அதிர்ந்தால் பூகம்பமாம்
நெருப்போ கொழுந்து விட்டால் தீயாம்
காற்றோ சுழன்றடித்தால் சூறாவளியாம்
ஆகாயம் கனத்தால் பெருமழை வெள்ளமாம்,
காய்ந்தால் வரலாறு காணாத வறட்சியாம்
ஓன்று இல்லையேல்
நமக்கு இல்லை வாழ்வு
இதில் எது சினம் கொண்டாலும்
அழிந்திடும் நம் வாழ்வு
போற்றுவோம் அன்னையை
காப்போம் அதன் பிள்ளைகளை
மீட்போம் நம் வாழ்வுதனை,
நலம் பெறுவோம்
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
---------------------
அன்புடன் வீரா
No comments:
Post a Comment