Sunday, 18 June 2017

ஐந்து அறிவு அன்பு

ஐந்து அறிவு அன்பு
______________________
வானம் கடலிடம் காட்டிடும் அன்பு
மழையாய் பொழிகிறது
சூரியனின் அன்பில் பூமி ஒளிர்கிறது
நிலவின் அன்பில் இரவு காய்கிறது

மலைக்கும் பனிக்குமான உறவு
அருவியாய் கொட்டுகிறது
தென்றலின் அன்போ
இதமாய் தழுவிச் செல்கிறது

பாம்புக்கும் எலிக்கும் உறவு
தழுவி விளையாடுகிறது
தாயில்லா குரங்குக்கு நாய் பாலூட்டும்
அன்பான குழந்தைக்கு பசுவும் பாலூட்டும்
அந்தக் காட்சியை மனிதா கண்டதுண்டா !

ஐந்தறிவு உயிரெல்லாம்
உறவாய் மாறியே
அன்பால் வாழ்ந்திட
ஆறறிவு படைத்த மனிதா
பகுத்தறிவு பெற்ற மானிடா

உனக்கு அன்பில்லாமல் போனது ஏனோ
அன்பால் எதையும் சாதிக்கலாம்
அகங்காரம் கொண்டவனே
ஐந்தறிவு உயிரியிடம் பழகிப் பார்
அன்புக் கடலில் மூழ்கி திளைப்பாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment