இதழ் பதித்து
இதயம் கேட்கின்றாய்
- - - - - - - - - - - - - - - - - - - -
இதழ் பதித்து
இதயம் கேட்கின்றாய்
முத்தமிட்டு
அன்பை வாங்கினாய்
தடவிக் கொடுத்து
தாயாய் மாறினாய்
தோள் கொடுத்து
தோழியாய் நீ ஆனாய்
மனதைக் கொடுத்து
உயிரை கேட்டாய்
உடலை கொடுத்து
சுகம் மட்டுமா கண்டாய்
உதிரம் பெற்று
உயிரை வளர்த்தாய்
உயிராய் இருந்து
உடன் வாழ்கிறாய்
இறுதி வரை
உண்மையாய் இருந்திட்டாய்
சுமைகள் பல தந்தேன்
சுகமாய் சுமந்திட்டாய்
இன்னல்கள் வந்தால்
மருந்தாய் நீ ஆற்றினாய்
துன்பங்கள் வந்தால்
பனித் துளியாய் அகற்றினாய்
இன்பங்களையும் துன்பங்களையும்
சமமாக பகிர்ந்தாய்
இன்முகத்துடன் என்னை
விருப்பமுடன் நேசிக்கின்றாய்
நன்றியுடன் நவில்கிறேன்
இக்கவியை அன்பே
உனக்கே சமர்ப்பிக்கின்றேன்
-- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Sunday, 18 June 2017
இதழ் பதித்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment