Sunday, 18 June 2017

சத்திய சோதனை

சத்திய சோதனை
- - - - - - - - - - - - - - - - -
நேர்மை மறைந்து போகிறது
பொய்மை துளிர் விட்டு வளர்கிறது
உண்மை மண்ணில் மறைகிறது
இயலாமை கண்ணில் தெரிகிறது
ஒவ்வாமை உடலில் பாய்கிறது
வெம்மை வெய்யலில் தணிகிறது

சட்டங்களை இயற்றினோம்
அதிலே ஓட்டையை கண்டறிந்தோம்
குற்றங்களை செய்திட்டோம்
நீதியின் கண்களை மறைத்தோம்
சட்டத்தை பணத்தால் வாங்கினோம்
எளிதாய் தப்புகின்றோம்
சத்தியத்தை மீறினோம்
பாவங்கள் பல படைக்கின்றோம்

இலஞ்சம் வாங்கினால் தப்பில்லை
கொடுத்தாலும் தவறாய் தெரிவதில்லை
பழக்க வழக்கமாய் மாறிப் போனதோ
அறியவில்லை
பொன் ஆசையால்
கொலையும் கொள்ளையும் நடக்கிறது
பெண்ணாசையால் பலாத்காரம் பல
நடக்கிறது

மண்ணாசையால் மனிதம் மறைந்தே போகிறது
உலகிலே சத்தியத்திற்கே சோதனை
நடக்கிறது
சத்தியம் வென்றிட வேண்டும் என
என் மனமும் இங்கே துடிக்கிறது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment