Thursday, 22 June 2017

விழித்திடு வென்றிடு

விழித்திடு வென்றிடு
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
விழிப்பாய் இருந்தால்
செழிப்பாய் நாம் இருக்கலாம்
வேகம் கொள்ளாதே
விவேகம் கடைபிடி
தலைக்கவசம் அணிந்திடுவோம்
குடும்பத்தைக் காத்திடுவோம்
வளைவிலே வேகம் வேண்டாம்
போட்டியும் நீ போட வேண்டாம்
நாமே  வகுத்துக் கொண்டோம்
விதிகளை மீறுவதா
குடிப்பது உயிருக்கு கேடு
மது அருந்தி வாகனம் ஓட்டாதே
மற்ற குடும்பத்து விளக்கை
நீயும் அணைத்திடாதே
உரிமம் பெறுவது அவசியம்
காப்பீடு பெறுவது அதைவிட அவசியம்
விழிப்பாய் சென்றிடு
விதியை மதியால் வென்றிடு
நிலையற்ற வாழ்விலே
நிலையாய் நாம் வாழ்ந்திடுவோம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment