Thursday, 22 June 2017

குழந்தையின் எதிர்காலம்

குழந்தையின் எதிர்காலம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
யாருமற்ற மாது அவள்
அனாதையாய் திரிந்தவள்
பிச்சையெடுத்தே பிழைப்பவள்
கையேந்தியே சாலையில் திரிந்தவள்
காமுகரின் பார்வையில் பட்டாள்
இன்னல்களை அனுபவித்தாள்
சிசுவிற்கு தாயாக மாறியே
குழந்தையை பெற்றெடுத்தாள்
பெற்றவள் பிச்சைக்காரி
குழந்தையும் தப்புமோ
சேர்ந்தே பிச்சையெடுக்குமே
குழந்தை செய்த பாவம்தான் என்னே
அவளுக்கு பிறந்தது சாபமோ
எதிர்காலம் என்ன ஆகுமோ
நல்லவர் கண்ணில் படுமோ
தெய்வத்தின் அருள் கிடைக்குமோ
நன்றாகத்தான் வாழுமோ
வீதிக்கு ஏழு குழந்தையேனும்
பிச்சைக் கேட்டே திரிகின்றதே
என் நெஞ்சமும் பொறுக்கவில்லையே
இருந்தும் என்ன செய்வேன்
உதவிகள் செய்ய முடியவில்லையே
அரசுக்கு புரிந்திடுமோ
குழந்தைக்கு நல்வாழ்வு கிடைத்திடுமோ!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment