Sunday, 18 June 2017

எங்க ஊரு சொர்க்கம்

எங்க ஊரு சொர்க்கமுலே
- - - - - - - - - - - - - - - - - - - - - -
ஏ புள்ள கருப்பாயி
எங்க ஊரு வந்து பாரு தாயி
கரும்பு விளைஞ்சி கிடக்கு
நாத்து நட்டுக் கிடக்கு

நடுவுல பழமலைநாதன பார்க்கலாம்
மேற்கு பக்கம் போனா
கொளஞ்சியப்பர கும்மிடலாம்
வடக்கால நாம் போன
வேடப்பர தரிசிக்கலாம்

முனியப்பரு/ வெண்மலையப்பரு
அய்யனாரு , நொண்டி வீரன்
காடெல்லாம் சாமியப் பாரு
கேட்ட வரம் கிடைக்கும் பாரு

ஊரப் பிரிச்சி ஓடுது மணிமுக்தாறு
வெள்ளாற்றுடன் கூடலையாத்தூரில்
கூடி உறவாடுது
தண்ணி நிறைஞ்சிக் கிடக்கு
வெள்ளாமை வெளைஞ்சிக் கிடக்கு

சோத்துக்கு பஞ்சமில்லை
நீ விருத்தாலம் வந்துப் பாரு
காசிக்கு போக வேணாம்
விருத்த காசிக்கு வந்து விடு
புண்ணியம் நிறைஞ்ச ஊரு
அட சொர்க்கலோகம் நீயும் பாரு

ரம்பை, ஊர்வசிய பார்க்கனுமா
கொளஞ்சியப்பரு கல்லூரிக்கு வந்துப்பாரு
விதவிதமா பொம்மைகளை நீ வாங்கிட
ஒரு முறை வந்து விடு
செராமிக்க பார்வையிடு

எங்க ஊரு பயலுவோ
அட சிங்கமா சீறுவானுவோ
எங்க ஊரு பொன்னுங்க
கருப்பா கலையா இருப்பாளுவோ

கடலூரு மாவட்டம்
விருத்தாசலம் வட்டமடி
விருந்தோம்பி வாழ்ந்தோமடி
எங்க ஊருக்கு வாக்கப்பட்டு வந்திடடி
அடி கண்ணாலக் குயிலே
சொர்க்கத்தையும் காட்டுவேன்
தேவலோகத்தையும் நான் காட்டுவேன்
---------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment