இரவின் மடியில்
------------------------------
மனிதா நீ கோபம் கொண்டாய்
உறவுகளை இழந்தாய்
எரிமலையாய் வெடித்தாயே
சாதித்தது என்ன
மன அமைதியை இழந்ததே மிச்சம்
நீ செய்த காரியத்தால்
இயற்கைக்கு விரோதியானாய்
சுனாமியாய், புயலாய்
உன் இனத்தை
காவு கொண்டது இயற்கை
கோபத்தை மூட்டைக் கட்டு
நட்டத்தை ஈடு செய்திடு
--------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment