உன்னைக் கொடுத்து
என்னையெடுத்துப்போ
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
உன்னைக் கொடு
என்னைக் கொடுக்கின்றேன்
உன் அன்பைக் கொடு
என் உயிரையும் கொடுக்கின்றேன்
தூய்மையான மனதைக் காட்டு
உள்ளத்தை திறக்கின்றேன்
பாசத்தை மட்டுமே கேட்டேன்
என் உயிரையும் கொடுக்கின்றேன்
தாயாய் நீயும் இருந்து விடு
குழந்தையாய் நான் மாறிவிடுகின்றேன்
தோழியாய் நீ வேண்டும்
தோழனாய் நான் வருகின்றேன்
காதலியாய் நீ மலர வேண்டும்
வண்டாக வந்து தேன் அருந்திடுவேன்
நீ மழையாக வந்து விடு
நான் பூமியாகின்றேன்
நான் வானமாகின்றேன்
நீ மேகமாக வந்து
உன்னைக் கொடுத்துவிடு
என்னையெடுத்து சென்றுவிடு
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Thursday, 22 June 2017
உன்னைக் கொடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment