Sunday, 18 June 2017

வறுமையின் நிழலில் பசுமை

வறுமையின் நிழலில் பசுமை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வண்ணங்கள் பல உண்டு
ஏழ்மையின் வண்ணம் சிவப்பா
செழிப்பின் வண்ணம் பசுமையா
சிவப்பும் பச்சையும் கலந்திட வேண்டும்
கணவன் மனைவியாய் கூடிட வேண்டும்
சிவப்பாய் இருந்து பயனேது
பலரின் வாழ்க்கையே பாலைவனமாக
ரத்தத்தை உறிஞ்சு வாழ்வது ஏனோ
பசுமை மாறாத பிஞ்சுகள் பல
வறுமையின் கொடுமையாலே
கருத்துப் போனதை காணவில்லையோ
கையேந்தி திரியும் குழந்தைகளே
உங்கள் வாழ்வில் என்று வசந்தம் வீசிடுமோ
வறுமையின் நிழலில் பசுமை பூத்திடுமோ
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment