Sunday, 18 June 2017

தவளை தப்புமோ

தவளைதான் தப்புமோ
வாயைத்தான் மூடுமோ
ஆபத்து வரும் போதே
எழுப்பியதே சத்தமே
எதிரியின் உணவுக்கு
தவளை இரையானதே

மனிதனின் வாழ்வும்
இங்கே இப்படித்தான் நடக்கின்றது
மனிதனின் வாயும்
முதலை போல திறக்கின்றது
ஆபத்தை விலைக் கொடுத்தே
வாங்குகின்றது

வாழ்வாங்கு வாழ்ந்தவரெல்லாம்
நுணல் போல வாயாலே கெட்டனர்
தீண்டும் நாக்கால்
தீதினை நினைத்தாலே
தீவினைகள் சேரும்
அதனை அறியவில்லையோ

நல்லது செய்ய முடியவில்லை
தீங்காவது செய்யாமல் இருக்கலாம்
மனம் நினைத்தாலும்
வாய் கேட்கலையே

எதிரியின் பலத்தை அறிந்திடு
அதன் பின்னே அவனுடன் மோதிவிடு
வெறும் வாய்ச்சவடால் விடுவதால்
பயன் ஏது
இடம் பொருள், ஏவல் அறிந்துவிடு
செய்யும் செயலை தொடங்கிவிடு
நிதானத்துடன் செயல்படு
எதிரியை நீயும் ஓடவிடு
-------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment