மணக்காத வாழ்க்கை
- - - - - - - - - - - - - - - - - - -
மண் திண்ணும் உடல்
நுண்ணுயிர்களுக்கு
உணவாய் ஆனது
வாழும் போதே
யாருக்கும் பயனற்று வாழ்ந்திட்டோம்
சுயநல வாழ்க்கையே நடக்கின்றது
பொதுநலன் மறைந்தே போனது
வாழ்க்கையும் நாற்றமானது
விழுந்தவரை தூக்கிவிட மனமில்லை
ஊனத்தில் உழன்றவனை
காத்திட துணிவில்லை
கையேந்தியவனை உதாசீனப்படுத்தி
காயப்படுத்திட மறப்பதில்லை
உதவாவிட்டாலும் இகழாமல்
இருந்திடலாமே
அதனையும் மனம் எண்ணவில்லை
வாழ்ந்தென்ன பயன்
வாழும் போது அரக்கனாய் வாழ்கிறாய்
உயிர் போகும் முன்னே
வருந்தியே சாகிறாய்
இடையில் நல்லது செய்திட மனமில்லை
நீ சேர்த்து வைத்த சொத்துக்கள்
உன்னுடன் வரப் போவதும் இல்லை
பின்னே ஏன் உனக்கு பேராசைகள்
மணக்காத வாழ்க்கை தேவையா
புரிந்தே நீ வாழ்ந்திடு
ஆசைகளை துறந்திடு
நல்லதே செய்திடு
எளியோர்க்கு உதவிடு
மணந்திடும் வாழ்க்கை
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment