நம்பிக்கை
- - - - - - - - - - - - - -
நம்பிக் கெட்டவர் யாரும் இல்லை
நம்பாமல் கெட்டவர் பலருண்டு
நம்பிக்கை மட்டுமே வாழ்வின் மூலதனம்
பிடிப்பு இல்லா வாழ்க்கையால் பயன் ஏது
கைவிடாத ஆயுதம் நம்பிக்கை மட்டுமே
தாய் நம் மீது வைத்தாள்
மனைவி மீது நாம் வைத்தோம்
மனைவி நம்மை நம்பினாள்
குழந்தைகளும் நம்மை நாடியே
இனித்திடும் வாழ்வாய் மாறும் நம்பிக்கை
நம் மூன்றாவது கையாகுமே
நண்பர்கள் வட்டாரம் தானாய் அமைய
உறவுகள் என்றும் நிலைத்திட
மன அமைதி கிடைத்திட
நாம் அவரையும், அவர் நம்மையும் மதித்திட
பணம், பொருள் தேவையில்லை
நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்
நம்பிக்கையை இழந்திட வேண்டாம்
முயன்றே தோல்விதனை வென்றிடலாம்
நம்பியவரை கைவிட வேண்டாம்
நம்பிக்கை துரோகம் செய்திட வேண்டாம்
எதிரிகள் முளைப்பதில்லை
துரோகத்தால் விதைக்கப்பட்டனர்
நம்பிக்கை என்ற ஆயுதத்தாலே
வேருடன் பிடுங்கிடுவோம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment