Thursday, 22 June 2017

இதயத்தை திறந்திடு

இதயத்தை திறந்திடு
இல்லறத்தில் இணைந்திட
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
நிலவொளியும் நாணம் கொண்டது
உன் அழகிலே மயங்கியே
சூரிய ஒளியும் மங்கிப் போனது
உன் முகம் கருத்திடுமென்று

மலர்ந்த மலர்களோ தலை சாய்ந்தது
உன் வரவில் ஏங்கியே
தேனெடுக்கும் தேனிக்களும்
தம் வேலையை மறந்தது
உன் கூந்தலில் அடைக்கலம் தேடியது

தென்றலும் தீண்டி சென்றது
உனை உரசிடவே விருப்பம் கொண்டது
கடல்அலைகள் தவழ்ந்து வந்தது
உனை தழுவிச்சென்றது

உலகின்  உயிர்கள் எல்லாம்
ஏக்கம் கொண்டது
உன்னுடன் பழக வரம் வேண்டியது
தவமின்றி கிடைத்திட்டாய் எனக்கே

இதயத்தை திறந்திடு
இல்லறத்தில் இணைந்திடுவோம்
நம்மை பார்த்தே
உலகம் வாழட்டும்
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment