பசலை நோய்!
- - - - - - - - - - - - - - - - -
தனிமையில் தவிக்கிறேன்
பொட்டிட்ட நாளை நினைக்கிறேன்
நீயில்லா நாட்களில்
துவண்டு தான் போகிறேன்.
தலைவா உன்னை எண்ணியே
காலத்தை கடத்துகிறேன்.
உன் கடைக்கண் பார்வையறிந்து
உன் தேவைதனை நிறைவேற்றுவது
நான் செய்த பாக்கியம் - இங்கு
நீயில்லாமல் எனக்கென்ன வேலை
வாழ்ந்தாலும் மறைந்தாலும் உன்னுடனே
இருந்தும் என்னை விட்டு பிரிந்ததேன்
உயிர் துறந்தாலும் துறப்பேன்
உன்னை மட்டும் பிரிந்திடமாட்டேன்
உன் முத்த சத்தம்
என் நெஞ்சில் தேனாக பாய்கிறது கனவாக,
என்னுள் உன் ஊடல் கூட நினைவாக !
தெருக்கோடியை காண்கிறேன்
யார் வரவும் உன் வரவாக
காண்கின்றேன் என் மாய உலகாக!
எத்தனை நாள் தான் எனக்கு பச்சை தண்ணீர்,
கனவே வாழ்க்கையாய்
தினம் தினம் மெலிகிறேனே!
தாலியை கட்டி, அன்பை காட்டி
திடீர் பிரிவை தந்துவிட்டு சென்றாயே!
உன்னை நினைத்து ஜீவன் ஒன்று ஏங்குதே!
தலைவா நீயுமே என்
பசலை நோய் தீர்க்க வந்துவிடு
No comments:
Post a Comment