Sunday, 18 June 2017

என் இலக்கணமே

இலக்கணத்தில் வல்லினம் காணவில்லையாம்
எடுத்துச் சென்றாயோ நீ ஏதும்
எடுத்தாள வார்த்தைகளை தேடுகின்றேன்
உன்னிடமே பெறுகின்றேன்
இலக்கணத்தை கற்கின்றேன்
வல்லினப் பெண்ணே
மெல்லின மணமே
இடையின நடையே

உனையே வர்ணித்தேன்
ஒற்று பிழைகளைத் தவற விட்டேன்
பரிசுகளை இழந்து விட்டேன்
ஆழ்ந்து படிக்கின்றேன்
உன்னாலே தமிழை வாசிக்கின்றேன்
என் மொழியை சுவாசிக்கின்றேன்
இருந்தும் தவறுவது ஏனோ

ஆழ்ந்த பிடிப்பில்லையா
ஆர்வம் இருந்தும்
கவி வடிக்க தெரியவில்லையா
இலக்கணம் தெரியாமல்
உனை தரிசிக்கின்றேனா
தட்டச்சுப் பிழைகளா
எங்கே தவற விட்டேன்
வல்லினம் தவறியதே
தலை இங்கே துண்டானதே

முண்டம் இருந்து என்ன பயனோ
தேடுகின்றேன் உன்னிடத்திலே
உனைச் சுற்றியே வருகின்றேன்
களவாடியதை கொடுத்துவிடு
பாமாலை இயற்றிடுவேன்
உனக்கே சூடிடுவேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல. வீரபாண்டியன்

No comments:

Post a Comment