Thursday, 22 June 2017

காட்சி - கானம்

காட்சியும் கானமும்
- - - - - - - .----------------
கண்ணோடு கண்பேசி
மௌனமாய் உதித்தக் காதல்
அன்பே என கொஞ்சியது எங்கே
ஆருயிரே என வினவியது அங்கே
இன்றும் ஒலிக்கிறது காதில்
வண்டின் ரீங்காரமாய்

மனம் இரண்டும் ஒன்றானது
உடல்களும் இணைந்தது
காலம் செய்த பாலம்
காமத்தின் முடிவு
இதுதான் காதலின் உச்சமோ

காமம் முடிந்தது
காதல் முறிந்தது
வாழ்க்கை கசந்தது
மனமோ இருண்டது
தூக்கு மேடை அழைக்குது
இறுதி நொடிகளில்
கண்களில் கண்ணீர் சிந்த
நினைவுகள் திரும்பியதோ
-----------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment