Sunday, 18 June 2017

வருக தை மகளே

வருக தை மகளே
- - - - - - - - - - - - - - -
வருக தை மகளே வழியெல்லாம் பூ பூக்க,
சிவப்பு கம்பளம் விரித்திருக்க
பழையன கழிந்தது, புதியன புகுத்திடவே
வா மகளே! தை மகளே!

முப்போகம் விளையனும்,
மாரி நல்லா பொழிந்திடனும்.
மகசூலும் தந்திடனும்,
மரக்காய் கணக்காய் வந்திடனும்.

கடித்து சுவைத்திட கரும்பிருக்கு _புது பானையில் பொங்கிய பொங்கள் இருக்கு,
பரங்கி பூவை வைத்து கூப்பிடுறோம்.
ஒடி வா மகளே என் மகளே.

சுனாமியும்  வேண்டாம்
தானே, நீலம், வார்தா புயலும் வேண்டாம்
பெருமழையும் வேண்டாம்
இனியும் வந்து, துன்பம் தந்திட வேண்டாம்.

சாந்தம் மட்டும் போதும்
சமாதானம் மட்டும் வேண்டும்.
புத்தாண்டு வசந்தமாய் வீசிடவே
எங்களோடு வந்து விடு தை மகளே..

தமிழ் மகளே, செந்தமிழே!
சிங்கார சென்னை இருக்கு,
கூடி ஆட குமரியும் இருக்கு,
ஒடி வா மகளே, என் மகளே!

         அன்டன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்.



No comments:

Post a Comment