Sunday, 18 June 2017

எங்கே எனது கவிதை

எங்கே எனது கவிதை
- - .... - .. -------------------------
எங்கே எனது கவிதை
தேடிப்பார்த்தேன்
நான்கு புறமும்
மாடத்தில் பறக்கின்றது புறாக்கள்
சுவற்றில் கிருக்கல்களாய்
எனது கவிதைகள்
தெருக்களில் சுற்றித் திரிந்தேன்
என் தேவதையை கண்டு ரசித்தேன்
என் மூளையில் உதித்தது
புதுக் கவிதைகள்
அவளை ரசிக்க மறந்தேன்
காதல் வரிகளால்
தரிசித்து சென்றேன்
காதலின் காதலியை கண்டேன்
கண்ணால் கவிதை படைத்தேன்
பிரம்மனின் மகளை கண்டேன்
பிறந்ததன் பலனை அடைந்தேன்
எங்கெங்கோ தேடிச் சென்றேன்
இதயத்தில் குடியேறியதை மறந்தேன்
தேடலின் சுவையை அறிந்தேன்
தெம்மாங்கு பாடி அழைத்தேன்
தமிழை  சுவைத்தேன்
வார்த்தைகளை மாற்றி அமைத்தேன்
எதுகை எதிர்த்து நிற்க
மோனை மோதிப் பார்க்க
சந்தம் சிந்துப்பாட
அவளிடையே புன்னகை ததும்ப
என்னிடையே காதல் ஒளிர
அங்கே  நான் தேடிய
கவிதை கிடைத்தது
-............... - ....... - ஃ ....... ----... -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment