உனக்கென வாழ்கிறேன்
------------------------------------_____
உனக்கென வாழ்கிறேன்
உயிரையும் தருகிறேன்
உள்ளத்தை நேசித்தேன்
அன்பாய் இருந்தேன்
ஒரு வார்த்தை பேசிவிடு
உயிராய் இருந்துவிடுவேன்
காதலின் ஆழத்தை அறிந்தேன்
என் ஆழத்தை அறியவில்லையே
மனக் கண்களால் பார்
இதயத்தை திறந்து விடு
உன் உருவம் தெரியவில்லையோ
உன் நினைவில் வாழ்கிறேன்
இன்றளவும் நேசிக்கிறேன்
எனை ஏனோ வெறுக்கின்றாய்
மானே தேனே என கொஞ்சிய குயிலே
தன்னந்தனியே நான்
கூவுவதும் கேட்கவில்லையோ
தோளில் சாய்ந்த தருணம்
என்றும் பிரியா விடை கேட்டேன்
பிரிந்தே சென்றாய்
மடியில் உறங்கிய நேரம்
என் மன்னவனாய்
ஆக வேண்டும் என்றேன்
தூரந்து நிலவாய் நீ ஆனாய்
நீ என்னுடன் இருந்தாலும்
மாற்றிடம் சென்றாலும்
உன்னுடனே வாழ்ந்திடுவேன்
உள்ளத்தில் புகுந்திடுவேன்
அழிவில்லை எம் காதலுக்கு
உண்மை நேசம்
பந்தமாய் தொடரும்
என்றே உனக்கெனவே வாழ்கிறேன்
-_-_------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment