தாய் பாசம்
- - - - - - - - - - -
பத்து மாதம் சுமந்த வலிகள் தெரியவில்லை
ஈன்ற போது ரண
வேதனைகள் அறியவில்லை
வளர்க்கும் போது
பாசமே கண் முன் தெரிந்தது
ஒரு சொட்டு கண்ணீர் வருமுன்னே
தாயின் கண்களில்
பெருக்கெடுத்து ஓடும் கண்ணீர் கடலாக
தவறை தண்டித்தாலும்
நினைத்தே வருந்திடுவாள்
ஒரு முள் குத்தினாலும்
இவள் நெஞ்சே உடைபடும்
தாயின் மனமோ பித்து
மகன் தவறானவன் ஆனாலும்
மகனை விட்டு கொடுத்திடாமல்
வாதாடும் தெய்வம் அவள்
-------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment