Thursday, 22 June 2017

தொடுவானம் தூரமில்லை

தொடுவானம் தூரமில்லை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தொடுவானம் தூரமில்லை
தொடுகின்ற வானம் கையில் இருக்க
முயற்சியை தொடர்ந்திடு
தோல்வியால் உழன்றிடாதே
மனதளவில் தளர்ந்திடாதே

வாழ்க்கை ஒன்றும் சுமையில்லை
அதை சுமக்க நீயும் தயாராகிவிடு
நம்பியவர் எல்லாம் வீணர்களே
உன் நம்பிக்கையை மட்டும் இழந்திடாதே

தோல்விகள் ஒவ்வொன்றும் அனுபவம்
வெற்றியின் கனியை பறிக்கும்
பாடங்கள்
வெற்றியை நீயும் நெருங்கி விட்டாய்
நம்பிக்கையை நீயும் கைவிடாதே

ஏழை என்றே கலங்கிட வேண்டாம்
உழைப்பு ஒன்றே மூலதனமாய்
உண்மையாய் உழைத்திட்டால்
வானமாய் உயரலாம்

நம்பிக்கை, நாணயம் இருந்தால் போதும்
கைராசி தானாய் தேடி வரும்
புகழ்ச்சிகள் புகுந்து விளையாடும்
எளிமையாய் என்றும் இருந்திட வேண்டும்
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment