மேகம் கருக்கையிலே
- - - - - - - - - - - - - - - - - -
ஆ: மேகம் கருக்கையிலே
மழையும் பெய்யும் புள்ளே
மேகம் கருக்கலையே
மழையும் பெய்யலையே
விளைச்சலும் விளங்கலையே
சோத்துக்கு என்ன செய்வேன்
பெ: சனி மூல கருக்குது மச்சான்
மழை வரும் பாரு மச்சான்
ஆத்து தண்ணியிருக்க
கவலைப்பட வேணாம் மச்சான்
ஆ: ஆத்துல மண்ண சுரண்டுறான்
குளத்துல வீட்ட கட்டுறான்
நிலத்தடி தண்ணி வத்திப் போச்சி
நம்மப் பொழப்பு நாறிப் போச்சி
நிலம் எல்லாம் காயுதே
கண்ணீர் கூட வறண்டு போச்சே
பெ: நீ கலங்குனா நான் என் செய்வேன்
ஆறுதலா பேச முடியலையே
பாலுக்கு குழந்தை அழுதிடுதே
பொழப்புக்கு என்ன செய்வது மச்சான்
ஆ: ஆத்து மேட் டுல எலிகள் மேயுமடி
காத்தால போனா நாலு எலி மாட்டும்
எலிக்கறி திண்ணும் நேரம் வந்துடிச்சியே அடியே
Sunday, 18 June 2017
மேகம் கருக்கையிலே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment