Thursday, 22 June 2017

அன்பை சுமந்து

அன்பை சுமந்து
நேசத்தை அளக்கின்றேன்
.-------------------------------.---------
பாசத்தை மறந்து
பரதேசியாய் அலைந்தேன்
உன்னைக் கண்டேன்
காதலில் விழுந்தேன்

கண்ட நாள் என்ன நாளோ
பின் வந்தே அலைகின்றேன்
பார்த்த விழிகளை
கவர முடியாமல் விழிக்கின்றேன்

அன்பை சுமந்தேன்
நேசத்தை அளக்கின்றேன்
உயிராய் இருந்தேன்
உள்ளத்தில் குடியேறினேன்

புது உறவாய் நீ வந்தாய்
மலர்கள் மலர்ந்தது
என் நெஞ்சமும் மிதந்தது
வெறும் உறவாய் நினைக்கவில்லை
உயிராய் நேசிக்கின்றேன்

உண்மையாய் இருந்திடுவேன்
வேலியாய் நான் இருப்பேன்
கவிதையாக கூறவில்லை
அன்பை விதையாக விதைக்கின்றேன்
-------------------------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment