Sunday, 18 June 2017

முளை விடா முயற்சிகள்

முளைவிடா முயற்சிகள்
-------------------------------------
மக்கள் பெருக்கம் அதிகரித்திட
தேவைகளும் உயர்ந்திட
போட்டியும் பன்மடங்கு பெருகிட
மன அழுத்தம் நோயாய் வந்தது

ஓடிய வரை ஓடிக் கொண்டே இருப்போம்
பின்னால் வருபவரை ஏன் பார்க்க வேண்டும்
வெற்றி என்ற இலக்கில் செல்ல
தோல்வியோ பின்னால் துரத்த
தோல்வியே வா என அழைப்பது முறையோ

தோல்வியே வந்தாலும்
ஏற்றுக் கொள்ள வேண்டுமே
தோல்வியை மனதில் ஏற்றாமலே
வெற்றியை தலையில் ஏற்றாமலே
மன உறுதியுடன் போராடுவோம்
வெற்றிக்கனியை பறித்திடுவோம்

முயற்சிகள் பல உண்டு
தொடர்ந்து முயன்றிட
வெற்றிகள் வந்து குவிந்திடுமே
என்றும் ஆக்கமாய் இருக்க வேண்டும்
ஊக்கம் கொடுத்திட வேண்டும்
முயற்சிகள் முளைவிட
செய்திட வேண்டும்
சாதனையாளர்கள் பிறப்பதில்லை
முயற்சி என்ற வெற்றி
பிறந்தப் பின்னே
எட்டிப் பிடிப்பார் சாதனைகளை
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment