பெண்ணின் மானமும் வீரமும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - .
பெண்ணிடம் நாணத்தை
காணும் மானிடரே
அவர்தம் வீரத்தை கண்டதுண்டோ
சங்க இலக்கியம் தான் படித்ததுண்டோ
வாளைச் சுழற்றி
புறமுதுகை காட்டி ஒடச் செய்த
வீரச்சியின் வரலாற்றைதான் அறிந்ததுண்டோ
ஒருவனுக்கொருத்தி என்றே
தனக்கே இலக்கணம் வகுப்பாள்
மாதவி வீட்டை கணவன் நாடினாலும்
உத்தமியாய் அவன் பெயரைக் காப்பாள்
கண்ணகியை நேரில் பார்த்ததுண்டோ
இன்று உலகில் கண்டீரோ
அடுப்பூதும் பெண்களுக்கு
கல்வி எதற்கென்றீர்களே
இன்று அவர்தம் சாதனைகளை பார்த்தீரோ
பழமை பேசும் மனிதா
உன் மூளை மதிக்கெட்டுப் போனதா
பெண்கள் இன்றி
என்றென்றும் ஒரு அணுவும் அசையாதே
மானம் போனால் உயிரை துறக்கவும்
அஞ்சமாட்டாள்
போர் என்று வந்தால்
பூமாதேவியும் அஞ்சிடுவாள்
இனிதே வெற்றியை ஈட்டிடுவாள்
மானத்தை மலையாய் காப்பாள்
வீரத்தை எரிமலையாய் உமிழ்வாள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - .
பெண்ணிடம் நாணத்தை
காணும் மானிடரே
அவர்தம் வீரத்தை கண்டதுண்டோ
சங்க இலக்கியம் தான் படித்ததுண்டோ
வாளைச் சுழற்றி
புறமுதுகை காட்டி ஒடச் செய்த
வீரச்சியின் வரலாற்றைதான் அறிந்ததுண்டோ
ஒருவனுக்கொருத்தி என்றே
தனக்கே இலக்கணம் வகுப்பாள்
மாதவி வீட்டை கணவன் நாடினாலும்
உத்தமியாய் அவன் பெயரைக் காப்பாள்
கண்ணகியை நேரில் பார்த்ததுண்டோ
இன்று உலகில் கண்டீரோ
அடுப்பூதும் பெண்களுக்கு
கல்வி எதற்கென்றீர்களே
இன்று அவர்தம் சாதனைகளை பார்த்தீரோ
பழமை பேசும் மனிதா
உன் மூளை மதிக்கெட்டுப் போனதா
பெண்கள் இன்றி
என்றென்றும் ஒரு அணுவும் அசையாதே
மானம் போனால் உயிரை துறக்கவும்
அஞ்சமாட்டாள்
போர் என்று வந்தால்
பூமாதேவியும் அஞ்சிடுவாள்
இனிதே வெற்றியை ஈட்டிடுவாள்
மானத்தை மலையாய் காப்பாள்
வீரத்தை எரிமலையாய் உமிழ்வாள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment