Sunday, 18 June 2017

கோலங்கள்

கோலங்கள்
-------------------
கோலங்கள் இடும் பெண்ணே
உன் ரசனையின் தாக்கம் தான் என்னே
துயில் எழுந்தாய்
மஞ்சள் தெளித்தாய்
குளித்தாய்
புடவைக் கட்டியே
மகாலட்சுமியாய் வந்தாய்
வாசலில் அமர்ந்தாய்
உன் கை வண்ணத்தில்
கோலங்கள் புது மலர்களாய் பூத்திட
என் மனதிலும் கோலமிட்டாய்
நீயிட்ட கோலங்கள் அழிந்தது
என் மனதில் இட்ட கோலமோ
எனை பாடாய் படுத்துகின்றது
காதல் பூவாய் பூத்தது
என்னை ஏதேதோ செய்தது
நினைத்தேன் வந்தாய்
கண்களால் பேசியே
தரைதனில் கால்களால் கோலமிட்டாய்
எனக்கு பார்வையால் தூது விட்டாய்
துளசி மாடத்தை சுற்றினாய்
நான் உனையே சுற்றுகிறேன்
கோலமிடும் கண்ணே
எனை சொக்க வைத்தது ஏனோ
தவிக்கிறேன் நானே
என் வீட்டில் கோலமிட
என்று வருவாயோ
காத்திருக்கின்றேன் என் வீட்டு
மாடத்தில் என் மானே
உன் வீட்டு முற்றத்தைப் பார்த்தே
காலத்தையும் கடத்துகிறேன்
------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment