தூரத்து நிலா
- - - - - - - - - - - - - -
கூண்டில் நான் அடைப்பட்டேன்
கூண்டுக் கிளியாக
மனம் ஓட்டம் மட்டும் சுதந்திரமாய்
கூவமாய் ஓடி திரிகின்றது
நான் மட்டும் ஏனோ
தூரத்து நிலாவே
உனையே ரசிக்கின்றேன்
தூரத்தில் நீ இருப்பதாலே
அழகாக தெரிகின்றாய்
உனையே ரசிக்கின்றேன்
அதனாலோ என்னவோ
தினமும் தரிசினம் தருகிறாய்
நான் என்ன செய்வேன்
உனை ரசிக்கும் என்னால்
உனை அடைய முடியவில்லையே
அழகாய் இருக்கின்றாய்
சுகமாய் திரிகின்றாய்
நானும் அழகாய் இருந்ததாலே
கூண்டிலடைப்பட்ட பறவையானேன்
எனை மீட்கும் கள்வன் யாரோ
ஊரைச் சுற்றும் நிலாவே
என் காதலனிடம் தூதாய் செல்வாயோ
நான் படும் துன்பத்தைக் கண்டாயோ
இருட்டினில் துடிப்பதை அறிந்தாயோ
தினம் தினம் உனை காண்பதை அறிந்தாயோ
உனை ரசிப்பதை உணர்ந்தாயோ
எனை மீட்டிட
தூதாய் நீயும் செல்வாயோ
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment