Sunday, 18 June 2017

இரவின் மடியில்

இரவின் மடியில்
- - - - - - - - - - - - - - - - -
புத்தம் புது மலரே
புடவைக் கட்டிய பேரழகே
குடம் ஏந்திய தாமரை மலரே
தண்ணீர் எடுக்க செல்கின்றாயோ
பார்த்தே சென்றிடு கண்மணியே
ஊரார் கண் மேய்ந்துவிடும்
உன் முகவரியும் அழிந்துவிடும்
மாலையிடும் காலம் வரை
குனிந்த தலையோடு சென்றிடுவாயோ
பத்திரமாய் நீயும் திரும்பிடுவாயோ
__________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment