Thursday, 22 June 2017

ஓவியம்

ஓவியம்
-------------------
காதல் செய்த நானே
உன்னை ஓவியமாய் வரைந்தேன்
மறக்க முடியாமலே
உன்னோடு வாழ்கின்றேன்
தினம் தினம் சாகின்றேன்
உன் நினைவாலே உயிராய் வருகின்றேன்

ஆசை வார்த்தைகள் கூறினாய்
என்னை மோசம் செய்து சென்றாய்
உண்மை காதலின் கதி இது தானோ
இதற்காகவா என்னை
விரட்டி விரட்டி காதலித்தாய்

மறந்திட நினைக்கின்றேன்
கை வண்ணத்தில் உதிக்கின்றாய்
உயிராய் இருந்ததாலே
உயிரோவியம் நான் வடித்தேன்

நினைவுகள் சுமந்துவர
சுவற்றில் நான் வரைந்தேன்
சுமையை இறக்கி வைத்தேன்
ஏனோ இதயத்தை விட்டு
அகன்றிட மறுக்கின்றாய்

வண்ணங்கள் தீர்ந்தாலும்
என் குருதியால் நான் வடிப்பேன்
நீ என்னைவிட்டு பிரிந்தாலும்
உன்னுடனே நான் வசிப்பேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment