Sunday, 18 June 2017

கிராமத்து விருந்து

மருந்தாகும் கிராமத்து விருந்து
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மருந்தாகிடும் கிராமத்து விருந்து
அம்மியில் அரைத்த ருசியும்
ஆத்தாக் கைப்பட்ட மணமும்
அறுசுவையாய் மாறியே
அமிர்தமாய் இனித்திடும்

கல்யாணம் காரியம் கைகூட
நலங்கு சீர் செனத்தி செய்ய வேண்டும்
கிராமத்து மக்களும்
நிறைஞ்ச மனசா வந்து
சாங்கமெல்லாம் செய்திடுவார்
வயிறு நிறைய உண்டிடுவார்

கருவேப்பிலை மணமும் கமகமக்கும்
முந்தரி பருப்பு நிறைஞ்சி கிடக்கும்
மிளகு சீரகம் மணக்கும்
உணவும் எளிதில் செரிக்கும்

வாழையிலை போட்டு
இனிப்பு பலகாரம் இடம் பிடிக்கும்
வாழைப்பழமும் ஒன்று இருக்கும்
உண்டால் போதும்
தீராத நோயும் திரிந்து ஓடிடும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment